51. இருபதும் இருபதும் எழுவதே | TENDING TWENTY TWENTY
Update: 2020-08-16
Description
புத்தாண்டை தொடங்கிய
புத்துணர்ச்சி சலிக்குமுன்
புரட்சிப்படை ஜெனரல்
காசிம்சுலைமணி கொலை,
போயிங்737 நொறுங்கியதில்
போனஉயிர்கள் போனஇடம்
தெரியவில்லை!
வந்த பிப்ரவரியிலேயே
பிரித்துப்போட்டு பாழாய்போன
விளைபயிர்கள், அசுரவெட்டுக்கிளிகளால்
ஆப்ரிக்காவில் உண்டான
உணவுப்பஞ்சம்,தள்ளாடி
திண்டாடி திணறியமக்கள்!
மார்ச்மாதம் மார்ச்ஆவதற்குள்
இத்தாலியை முழங்காடிட
வைத்த கொரோனா!
மாய்ந்துபோன மரணங்களினால்
மனமுடைந்த இத்தாலிமக்களின்
நனைந்தகண்கள் கண்முன்னே!
அந்தஈரம் காய்வதற்குள்
ஏப்ரலில்பற்றி எரிந்தஉக்ரேன்!
அங்குவந்த புகையைக்கண்டு
இங்குசுவாசிக்கத் திணறிய
உலகமக்கள் தெளியுமுன்கண்ட
ஆப்கானிஸ்தானின் வெள்ளப்பெருக்கு!
மே புயலில் வேரறுந்தமரங்களால்
உயிரழந்த கொல்கத்தாமக்கள்!
பதினான்கு மில்லியன்மக்களும்
பலமிழந்து போன
பங்களாதேஷ் காட்சி,
பார்த்தோரை நெகிழவைத்தது!
இதேமே வில்மேலே போகும்
Comments
In Channel























